Thursday, April 23, 2009

நான்

நானும் கற்பனை மன்னன் தான் !
ஆனால், நான் கட்டும் கற்பனை கோட்டைகள்
நம் அரசு கட்டும் பாலங்களைபோல
இடிந்து விழாது.
அவள் என்னை விட்டு விலகியதற்காக
வருத்தப்படவில்லை.
கண் கலங்கவும் இல்லை.
மாறாக, சந்தோஷப்படுகிறேன்.
ஏனெனில், இப்பொழுது தான்
எனக்கு கவிதை (?) எழுத / கிறுக்க தெரிகிறதே !

நீங்களும், கவிதை எழுத விரும்புகிறீர்களா?
உங்கள் காதலை தோல்வி அடையச் செய்யுங்கள் !

வெட்கம்


என்னை கண்டவுடன்
ஓடி ஒளிந்த
உன்னை கண்ட நான்
என்னை நீ வெறுக்கிறாய் என அதிர்ந்தேன்.
பின் அறிந்தேன்... நீ வெட்கப்படுகிறாய் என....

இடைத்தேர்தல்

பேருந்திற்காக காத்திருக்கும்
பயணியைப் போல்,
தாய்க்காக ஏங்கி தவிக்கும்
குழந்தையைப் போல்
உன் வருகையை எதிர்நோக்கியிருக்கும்
என்னை......
ஏமாற்றி விட்டு
இடைத்தேர்தலைப் போல்
திடிரென்று வந்து நிற்கிறாயே !

உன் கூந்தல்


மல்லிகை பூவிற்கு
நறுமணம் எப்படி வந்தது
என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.
அது உன் கூந்தலில் உள்ளதே.

பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையில் நறுமணம் உள்ளதா ? இல்லையா?
என்ற வாக்குவாதம்..... நீ அன்றே பிறந்திருந்தால் ஏற்பட்டிருக்காது.

வர்ணனை

அன்பே !
உன்னை தேவலோக கன்னி என வர்ணிக்க மாட்டேன்
ஏனெனில் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
தாமரை மலரோடும் ஒப்பிடமாட்டேன்.
ஏனெனில், தாமரை மலரில் பல வண்டுகள் வந்து தேன் குடித்து செல்லுமே !

உன் அழகு


அன்பே !
உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே !
எனது கவிதைகளில் பார் !